TNPSC Thervupettagam

மகப்பேறு விடுப்பு குறித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு

May 1 , 2026 14 hrs 0 min 1 0
  • மூன்றாவது கர்ப்பத்திற்கான மகப்பேறு விடுப்பை 12 வாரங்களாக தமிழக அரசு குறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று விடுப்பை 3 மாதங்களாகக் குறைத்து வெளியிட்ட அரசாணையை (G.O.) நீதிமன்றம் நிராகரித்தது.
  • மூன்றாவது கர்ப்பமாக இருந்தாலும் பெண் ஊழியர்கள் 365 நாட்கள் விடுப்பு பெற உரிமை உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து கர்ப்பங்களிலும் வலியும் கவனிப்பும் ஒன்றுதான் என்பதால், எந்த பாகுபாடும் காட்ட அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்த முடிவு, மூன்றாவது கர்ப்பத்திற்கும் விடுப்பு அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் மகப்பேறு விடுப்பு தொடர்பான தீர்ப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • இந்த அரசாணை சரத்து 162-ஐ (இந்திய அரசியலமைப்பின் கீழ் மாநில அரசின் அதிகாரம்) பயன்படுத்தி வெளியிடப்பட்டது ஆனால் இது மகப்பேறு உரிமைகளை மீற முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்