மகளிருக்கு அரசியல் அதிகாரமளிக்கும் நாள்- ஏப்ரல் 24
April 24 , 2019 2427 days 1247 0
மகளிருக்கு அரசியல் அதிகாரமளிக்கும் நாளானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் நாள் இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றது.
அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தின் தேவையைப் பற்றி கவனம் செலுத்தும் யோசனையை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
இந்திய அரசியலமைப்பின் 9-ஆம் அட்டவணையில் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ம் நாள் கொண்டுவரப்பட்ட 73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமானது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல் இடங்களை ஒதுக்கியுள்ளது.
புது டெல்லியில் உள்ள சமூக அறிவியல் நிறுவனமானது 1994 ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 24 ஆம் நாளை பெண்களுக்கு அரசியலில் அதிகாரமளிக்கும் நாளாக அனுசரித்து வருகிறது.
2019 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்படும் இந்த 25-வது மகளிருக்கு அரசியல் அதிகாரமளிக்கும் தினத்தின் கருத்துருவானது, “பேரழிவு மேலாண்மையில் பஞ்சாயத்துகள்” என்பதாகும்.