TNPSC Thervupettagam

மகளிர் இட ஒதுக்கீடுச் சட்டம் 2023

April 19 , 2026 2 days 65 0
  • நாரி சக்தி வந்தன் ஆதினியம் 2023 சட்டமானது மத்திய அரசால் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
  • சட்டம் அமலுக்கு வரும் தேதியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஐ மத்திய அரசு அறிவித்தது.
  • இது நிறைவேற்றப்பட்ட ஒரு அரசியலமைப்பு திருத்தச் சட்டமாகும், இருப்பினும் இது செயல்படத் தொடங்குவதற்கு முறையான அறிவிக்கை தேவைப்படுகிறது.
  • சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வராமல், உத்தேசிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை செயல்படுத்த முடியாது.
  • சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தாலும், தற்போதைய அவையில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது.
  • இதனைச் செயல்படுத்துவது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புடன் தொடர்புடையது.
  • 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து தொகுதி மறு சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகே இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
  • அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்த பிறகு, 2034 ஆம் ஆண்டு வாக்கில் இந்தச் சட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்