மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள்
September 21 , 2025
14 hrs 0 min
8
- சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு (SHG) உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை தமிழ்நாட்டின் துணை முதல்வர் வழங்கினார்.
- இந்தியாவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் முதல் மாநில அரசு தமிழ்நாடு அரசாகும்.
- தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
- ஐந்து மாதங்களுக்கு முன்பு திருவாரூரில் நடைபெற்ற ஓர் அரசு விழாவில் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் அடையாள அட்டைகளுக்கான தேவை எழுப்பப்பட்டது.
- இந்த அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் தயாரிப்புகளை அரசு பேருந்துகளில் 100 கிலோமீட்டர் வரை இலவசமாக கொண்டு செல்லலாம்.
- ஆவின், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் முதல்வர் மருந்தகம் விற்பனை நிலையங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படும்.
Post Views:
8