தமிழ்நாடு அரசானது 2015 ஆம் ஆண்டு மகளிர் மற்றும் சிறார்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) விதிகளைத் திருத்தியமைத்தது.
இது ஒரு பெண்ணுக்கான சராசரி இட (பரப்பு) ஒதுக்கீட்டை 120 சதுர அடியிலிருந்து 50 சதுர அடியாகக் குறைத்தது.
இந்த விதிகள் 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் சிறார்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், அரசு உரிம நடைமுறையை திருத்தியமைத்தது என்பதோடுஇதன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் 10,000 ரூபாய் கட்டணத்துடன் இயங் கலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் சரி பார்த்த பிறகு உரிமங்கள் தானாக உருவாக்கப்படும் என்பதோடு மேலும் அது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இந்த விதிகள் ஆனது அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், சமய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களால் நடத்தப் படும் விடுதிகள், இல்லங்கள் மற்றும் தங்குமிட வசதிகளுக்குப் பொருந்தும்.