இந்து குடும்பத்தில் உள்ள மகள்கள் இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் அமலாக்கத்திற்கு முன்பாக அவரது தந்தை இறந்து போனாலும் கூட கூட்டு இந்துக் குடும்பச் சொத்தில் அவர்கள் சம வாரிசுரிமையைப் பெறுகின்றனர் என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்தத் தீர்ப்பானது மூதாதையர்களின் மரபுரிமைச் சொத்தினைப் பெற்றிட மகள்களுக்குச் சம உரிமையை வழங்கும் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 என்ற சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அப்பொழுதிலிருந்தேப் பொருந்தக் கூடியதாக இருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.