TNPSC Thervupettagam

மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய முன்முயற்சி

February 4 , 2026 14 days 66 0
  • இந்தியாவில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வலுப்படுத்தும் நோக்கில், மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய முன்முயற்சி 2026-27 ஆம் ஆண்டு ஒன்றிய நிதி நிலையறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த முன்முயற்சியானது, காதி மற்றும் அது தொடர்பான பொருட்களுக்கான உலகளாவியச் சந்தை இணைப்புகளையும் வணிக அடையாள ஆதரவையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் உற்பத்தியின் தரம் ஆகியவற்றை நெறிப்படுத்தி ஆதரிக்கும்.
  • இந்தத் திட்டத்தால் நெசவாளர்கள், கிராமத் தொழில்கள், ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) திட்டம் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்த முன்முயற்சியானது, தேசிய இழைத் திட்டம் மற்றும் ஜவுளி விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட ஐந்து முக்கிய கூறுகளைக் கொண்ட ஒரு பரந்த ஒருங்கிணைந்த ஜவுளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்