TNPSC Thervupettagam

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கீடு

January 4 , 2023 957 days 435 0
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGS) பங்குபெறும் பெண் தொழிலாளர்களின் விகிதமானது, நடப்பு நிதியாண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
  • மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திய தொழிலாளர்களில் 57.8% பெண்கள் ஆவர்.
  • 2012-13 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பதிவான தரவுகளில் பெண்களின் மிக அதிக பட்சப் பங்கேற்பு நிலை இதுவாகும்.
  • இதன்படி மதிப்பாய்வு செய்யப்பட்ட 15 மாநிலங்களுள் 14 மாநிலங்களில் பெண்களின் பங்கேற்பில் முன்னேற்றப் போக்குகள் பதிவாகியுள்ளன.
  • கேரள மாநிலம் இந்த விகிதத்தில் மிகவும் குறைவான வீழ்ச்சியை மட்டுமே கண்டது.
  • கடந்த ஐந்து ஆண்டுகளாக, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பதிவான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கீடு 85-90% என்ற விகிதங்களுக்கு இடையே நகர்ந்து வருகிறது.
  • பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த அதிகரிப்பு அதிகமாக பதிவாகியிருந்தது.
  • பீகாரில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் இந்த ஆண்டு 3.7 சதவீதப் புள்ளிகள் உயர்ந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இது 3.3 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளன.
  • ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட அதிகரிப்பிற்குப் பிறகும், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான MGNREGA திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட பெண்களின் கட்டாயப் பங்கேற்பு விகிதமான 33 சதவீதத்தினை விட சற்று அதிகமாக மட்டுமே உள்ளது.
  • கடந்த ஆண்டில் 34.28% என்ற அளவில் இருந்த பெண்களால் பயன்படுத்தப்பட்ட வேலை நாட்கள் ஆனது இந்த ஆண்டு 37.6% அளவில் மட்டுமே பயன்படுத்தப் பட்டு உள்ளது.
  • உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள MGNREGA பணியாளர்களில் பெண் பணியாளர்கள் 50 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்