TNPSC Thervupettagam

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான குறை தீர்ப்பாளர்

June 15 , 2022 1064 days 873 0
  • N.J. ஓஜா என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக இரண்டு வருடக் காலத்திற்கு நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களிடமிருந்துப் புகார்களைப் பெற இவருக்கு அதிகாரம் உள்ளது.
  • இவர் அத்தகையப் புகார்களைப் பரிசீலித்து, புகார் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அதற்கானத் தீர்வுகளை வழங்குவார்.
  • மேலும், நேரில் விசாரணை நடத்துவதற்கான வழிகாட்டுதலையும் இவர் வழங்குவார்.
  • தாமதமாக ஊதியம் வழங்குவது அல்லது வேலையின்மைக்கான உதவித் தொகையை வழங்காதது தொடர்பான பிரச்சனைகள் உட்பட ஏதேனும் குறைகள் இருந்தால் இவர், 'தாமாகவே' முன்வந்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்