மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான குறை தீர்ப்பாளர்
June 15 , 2022 1253 days 1166 0
N.J. ஓஜா என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக இரண்டு வருடக் காலத்திற்கு நியமிக்கப் பட்டு உள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களிடமிருந்துப் புகார்களைப் பெற இவருக்கு அதிகாரம் உள்ளது.
இவர் அத்தகையப் புகார்களைப் பரிசீலித்து, புகார் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அதற்கானத் தீர்வுகளை வழங்குவார்.
மேலும், நேரில் விசாரணை நடத்துவதற்கான வழிகாட்டுதலையும் இவர் வழங்குவார்.
தாமதமாக ஊதியம் வழங்குவது அல்லது வேலையின்மைக்கான உதவித் தொகையை வழங்காதது தொடர்பான பிரச்சனைகள் உட்பட ஏதேனும் குறைகள் இருந்தால் இவர், 'தாமாகவே' முன்வந்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.