மகாநதி நீர்த் தகராறுத் தீர்ப்பாயத்தின் (MWDT) முன் மகாநதி நீர்ப் பிரச்சினையினை இணக்கமாக தீர்க்க ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் விருப்பம் தெரிவித்து உள்ளன.
இரு மாநிலங்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டிய செயலாளர்களுடன் தீர்வு சார்ந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து இந்தத் தீர்ப்பாயத்திற்குத் தெரிவிக்கும்.
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ், மத்திய நீர் வள ஆணையம் (CWC) தலைமையிலான ஒரு கூட்டுக் குழுவை அமைக்க ஒடிசா முன்மொழிந்தது.
சத்தீஸ்கரில் உருவாகும் மகாநதி, 851 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து பின்னர் வங்காள விரிகுடாவை அடையும் முன், 494 கிலோமீட்டர் தூரம் வரையில் ஒடிசாவில் பாய்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த நதியின் மேல் மட்ட ஓட்டத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் நதி ஓட்டத்தைக் குறைத்து, பாசனம், குடிநீர் மற்றும் சூழலியல் ஆகியவற்றைப் பாதித்ததாக ஒடிசா குற்றம் சாட்டுகிறது.
அதன் நீர்ப் பயன்பாட்டை நியாயப்படுத்தி, நதியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியில் 52.9 சதவீதம் ஆனது அதன் எல்லைகளுக்குள் இருப்பதாக சத்தீஸ்கர் கூறுகிறது.
இந்தச் சர்ச்சையானது 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறுகள் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2018 ஆம் ஆண்டில் MWDT உருவாவதற்கு வழி வகுத்தது.