TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா ஈரநிலங்கள் ஆவணப்படுத்தல்

May 22 , 2026 4 days 47 0
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 23,415 ஈரநிலங்களில் 23,404 ஈர நிலங்களின் களச் சரிபார்ப்பை அம்மாநில அரசு நிறைவு செய்துள்ளது.
  • சரிபார்ப்பு நிலுவையில் உள்ள மீதமுள்ள 11 ஈரநிலங்களும் புனே மாவட்டத்தில் அமைந்துள்ளன.
  • சரிபார்க்கப்பட்ட ஈரநில வரைபடங்கள், ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யப்படுவதற்காக மாவட்ட நிர்வாகங்களுக்கும், மாநில ஈரநில ஆணையத்திற்கும் அனுப்பப்படும்.
  • மகாராஷ்டிராவில் அகமதுநகர் மாவட்டம் 1,596 ஈரநிலங்களுடன் முதலிடத்தில் உள்ளது என்பதோடு இதனைத் தொடர்ந்து நாசிக் மற்றும் சந்திரபூர் மாவட்டங்கள் உள்ளன.
  • சதுப்பு நிலங்கள், குளங்கள், ஈரநிலங்கள், மாங்குரோவ் காடுகள் மற்றும் காயல்கள் ஆகியவை ஈரநிலங்களில் அடங்கும் என்பதோடு இவை நீர் பாதுகாப்பு, வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
  • தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையமானது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்