மகாராஷ்டிரா மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 23,415 ஈரநிலங்களில் 23,404 ஈர நிலங்களின் களச் சரிபார்ப்பை அம்மாநில அரசு நிறைவு செய்துள்ளது.
சரிபார்ப்பு நிலுவையில் உள்ள மீதமுள்ள 11 ஈரநிலங்களும் புனே மாவட்டத்தில் அமைந்துள்ளன.
சரிபார்க்கப்பட்ட ஈரநில வரைபடங்கள், ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் அறிவிக்கை செய்யப்படுவதற்காக மாவட்ட நிர்வாகங்களுக்கும், மாநில ஈரநில ஆணையத்திற்கும் அனுப்பப்படும்.
மகாராஷ்டிராவில் அகமதுநகர் மாவட்டம் 1,596 ஈரநிலங்களுடன் முதலிடத்தில் உள்ளது என்பதோடு இதனைத் தொடர்ந்து நாசிக் மற்றும் சந்திரபூர் மாவட்டங்கள் உள்ளன.
சதுப்பு நிலங்கள், குளங்கள், ஈரநிலங்கள், மாங்குரோவ் காடுகள் மற்றும் காயல்கள் ஆகியவை ஈரநிலங்களில் அடங்கும் என்பதோடு இவை நீர் பாதுகாப்பு, வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையமானது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.