மகாராஷ்டிரா சிறப்புப் பொதுப் பாதுகாப்பு (MSPS) சட்டம், 2024
July 22 , 2024 488 days 446 0
நகர்ப்புறங்களில் 'நக்சலிசத்தின் அச்சுறுத்தலை' தடுப்பதை இந்தச் சட்டம் ஒரு பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் விதிகள் ஆனது, பிடியாணை அற்ற மற்றும் பிணை ஆணையைப் பெற முடியாத சில குற்றப் பதிவுகளைக் கொண்ட எந்தவொரு அமைப்பையும் ‘சட்ட விரோதமானது’ என அறிவிப்பதற்கு அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.
முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் ஆனது பெரும்பாலும் குற்றச்சாட்டுகள் குறித்தத் தகவல்களை தெரிவிக்காமலேயே தனிநபர்களைப் பிடியாணை இன்றி கைது செய்ய வழி வகுக்கும்.
மாவோயிஸ்டு அமைப்புகளால் பாதிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டங்களை அமல்படுத்தி உள்ளன.
1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) ஆனது நக்சலிசம் மற்றும் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் செயல்படுத்தப்படுகிறது.
இந்தச் சட்டம் ஆனது குறிப்பிட்ட அமைப்புகளை ‘சட்டவிரோத அமைப்புகள்’ என வகைப் படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இரண்டு சட்டங்களும் சற்று ஏறக்குறைய ஒரே மாதிரியானவையாகும்.
இருப்பினும், MSPS சட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படும் அல்லது அவ்வாறு நியமிக்கப்பட தகுதி பெற்ற மூன்று நபர்கள் கொண்ட ஆலோசனைக் குழு ஆனது இந்த உறுதிப்படுத்தல் செயல்முறையை மேற்பார்வையிடும்.
ஆனால் UAPA சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் அரசின் அறிவிப்பைச் சரிபார்க்கிறது.