மகாராஷ்டிரா மாநிலச் சச்சரவில் அப்போதைய ஆளுநர் மற்றும் சட்டப் பேரவையின் சபாநாயகரின் பங்கு குறித்து உச்ச நீதிமன்றமானது தனது வலுவான கருத்துகளை வெளியிட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பினர் உள்ளிட்ட சிவசேனாவின் போட்டித் தரப்பினர் அந்த மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பாக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்திடம் மனு அளித்தனர்.
ஷிண்டே தரப்பினரின் மனுவில் அவர் மீதும் அவருக்கு ஆதரவான 15 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் விதிக்கப்பட்ட தகுதி நீக்க அறிவிப்புகளை எதிர்த்து மனு தாக்கல் செய்யப் பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பினை எதிர்கொள்ளாமல் ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே தலைமையிலான அப்போதைய மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தினை மீண்டும் நியமிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
உட்கட்சிப் பூசல்களைத் தீர்ப்பதற்கான ஒரு ஊடகமாக நம்பிக்கை வாக்கெடுப்பினைப் பயன்படுத்த முடியாது.
ஆளுநருக்கு அரசியல் களத்தில் தலையிடவும், உட்கட்சி முதல் கட்சிகளுக்கு இடையே உள்ள பூசல்களில் பங்கு வகிக்கவும் அதிகாரம் இல்லை.
மேலும் உச்ச நீதிமன்றமானது ஒரு அரசியல் கட்சியால் முறையாக அங்கீகரிக்கப் பட்ட கட்சித் தலைவர் மற்றும் கொறடா ஆகியோரை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும்.
மேலும் உச்ச நீதிமன்றம் தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க விசாரணை நடைமுறைகளில் தலையிடவும் மறுத்து விட்டது.
மேலும் உச்ச நீதிமன்றமானது, தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாகவே தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்து விட்டதால், புதிய அரசினை அமைக்க ஷிண்டேவை ஆளுநர் அழைத்தது என்பதில் தவறேதும் இல்லை எனக் கூறி விட்டது.
மேலும் உச்ச நீதிமன்றமானது, தகுதிநீக்க விசாரணை நடைமுறைகளை சில சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர் கொள்ளும் ஒரு காரணத்தினாலேயே அவர்கள் பங்கு பெற்ற சபா நாயகரின் தேர்தலை ரத்து செய்ய மறுத்து விட்டது.
வாக்கெடுப்பின் மீதான ஒரு கட்சிக் கொறடாவின் ஒரு உத்தரவானது அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு நிலையினை விட அந்தக் கட்சியின் நிலையினை மட்டுமே பிரதிபலிக்கச் செய்கிறது.
தனது கொறடாவினையும் தனது சட்டமன்ற அவைத் தலைவரையும் ஒரு கட்சி மட்டுமே நியமனம் செய்கிறது.
இதன்படி ஒரு முக்கியப் படிப்பினை என்பது ஒரு கட்சியின் சட்டமன்றப் பிரிவை விட அந்தக் கட்சியே மேன்மையானது ஆகும்.