1960 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், இருமொழிகள் கொண்ட பம்பாய் மாநிலம் பிரிக்கப்பட்டு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய இரண்டு தனி மாநிலங்களாக உருவாக்கப் பட்டன.
1950 ஆம் ஆண்டுகளில் சன்யுக்த மகாராஷ்டிரா இயக்கம் மூலம் தனி மராத்தி மொழி பேசும் மாநிலத்திற்கான கோரிக்கை உத்வேகம் பெற்றது.
1928 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மகாகுஜராத் இயக்கம் ஆனது, 1950 ஆம் ஆண்டுகளில் உத்வேகம் பெற்றது.
அதன் ஆதரவாளர்கள் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியின் சில பகுதிகள் உட்பட குஜராத்தி மொழி பேசும் மக்களைக் கொண்ட அனைத்துப் பகுதிகளையும் ஒன்றாக இணைக்கும் ஒரு மாநிலத்தினை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்தனர்.