மகாராஷ்டிராவில் அறிவிக்கப்பட வேண்டிய நோய் - பாம்புக்கடி
August 22 , 2026 2 days 54 0
மகாராஷ்டிரா மாநிலம் பாம்புக்கடியை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்தது, இதன் மூலம் சந்தேகத்திற்குரிய, சாத்தியமான மற்றும் உறுதிப்படுத்தப் பட்ட அனைத்துவிதபாதிப்புகளையும் இறப்புகளையும் தெரிவிப்பது கட்டாயமாக்கப் பட்டு ள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுகாதாரப் பயிற்சியாளர்கள் நோய்களைப் பற்றிய தகவல்களைச் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (IDSP) ஆகியவற்றின் மூலம் தெரிவிக்க வேண்டும்.
இந்த அறிவிப்பில், கடித்த தேதி மற்றும் இடம், நோயாளியின் வயது மற்றும் பாலினம், விஷத்தின் அறிகுறிகள் மற்றும் செலுத்தப்பட்ட பாம்பு விஷ முறிவு மருந்து (ASV) அளவு போன்ற விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் வரை சுமார் 1.29 லட்சம் பாம்புக்கடி பாதிப்புகளையும் 655 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று கட்சிரோலியில் உள்ள அரசு உதவி பெறும் உறைவிடப் பள்ளியில் நடந்த பாம்புக்கடி சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதுடன், அங்கு மூன்று பழங்குடியின பள்ளி மாணவிகள் இறந்தனர், மற்றும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.