TNPSC Thervupettagam

மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு

February 24 , 2026 2 days 47 0
  • முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசு, முஸ்லிம் சமூகத்தின் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான பத்தாண்டு பழமையான 5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.
  • இந்த ஒதுக்கீடு முதலில் ஜூலை 2014 இல் காங்கிரஸ்-என்சிபி அரசாங்கத்தால் ஒரு அவசரச் சட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் அது ஒருபோதும் சட்டமாக மாற்றப் படாமல் டிசம்பர் 2014 இல் காலாவதியானது.
  • சமயத்தின் அடிப்படையில் மட்டுமே பாகுபாட்டைத் தடை செய்யும் பிரிவுகள் 15(1) மற்றும் 16(2) இன் கீழ் அரசியலமைப்பு சிக்கல்களை அந்த அரசாங்கம் மேற்கோள் காட்டியது.
  • இந்திய உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள், நலிந்தோர் நலநோக்கு நடவடிக்கை என்பது மத அடையாளத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்று தொடர்ந்து தீர்ப்பளித்துள்ளன.
  • இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கான சிறப்புப் பிற்படுத்தப் பட்ட பிரிவு-A (SBC-A) சாதி மற்றும் செல்லுபடியாகும் சான்றிதழ்கள் வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்