மகாராஷ்டிராவில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு 1 கோடி ரூபாய்
July 18 , 2019 2223 days 723 0
எல்லையில் தேசப் பணியின் போது உயிர் நீத்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பிற்கு அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உயிர் நீத்த இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது 25 இலட்சத்திலிருந்து 1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தப்பட இருக்கின்றது.
இந்த முடிவு மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட மேம்பட்ட இழப்பீடுகளைப் பிரதிபலிக்கின்றது.