மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகமானது நாடு முழுவதும் உள்ள பெண் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் புதுமையான இயற்கை விவசாயப் பொருட்களுக்காக ஒரு நேரடியான சந்தைப்படுத்தும் இணைய தளமான மகிளா-இ-ஹாத் என்ற இணைய தளத்தை ஆரம்பித்திருக்கின்றது.
மேலும் இது அவர்களின் சாதனைகளை ஒருங்கிணைந்து மேம்படுத்தி கொண்டாடச் செய்வதற்கான ஒரு மின்னணு நடைமுறையாகவும் செயல்படுகின்றது.
இத்தளம் 2018-ம் ஆண்டின் “இந்தியப் பெண்களின் தேசிய இயற்கைத் திருவிழா” என்பதை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டது.
10 நாள் திருவிழாவான “இந்தியப் பெண்கள் தேசிய இயற்கைத் திருவிழா 2018” என்ற விழாவின் 5வது பதிப்பு டெல்லியில் இந்திரா காந்தி கலைகளுக்கான தேசிய மையத்தில் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.