TNPSC Thervupettagam

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்களுக்கான வட்டிக்கு வருமான வரிப் பிடித்தம்

May 23 , 2023 739 days 324 0
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் மூலம் பெறப்படும் வட்டி மீதான வரிவிதிப்பு பற்றிய ஒரு தெளிவான அறிவிப்பினை மத்திய நேரடி வரிகள் வாரியம் சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.
  • இந்த அறிவிப்பின்படி, ஒரு நிதியாண்டில் இந்தச் சான்றிதழ்கள் மூலம் பெறப்பட்ட வட்டி 40000 ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் வருமான வரிப் பிடித்த விதி இதற்குப் பொருந்தாது.
  • இது பெண்களை அதிகளவில் முதலீட்டில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • இது வட்டி வருவாய் மீதான வருமான வரிப் பிடித்த விலக்கினைப் பெற்றுள்ளது.
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டமானது, 2023 ஆம் நிதியாண்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேக சேமிப்புத் திட்ட வாய்ப்பாக அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இது 7.5% என்ற முதலீட்டினை ஈர்க்கும் வகையிலான வருடாந்திர வட்டி விகிதத்தினை வழங்குகிறது.
  • இது தனிநபர்கள் தங்கள் பெயரில் ஒரு கணக்கைத் திறப்பதற்கான வாய்ப்பினை அளிக்கிறது.
  • இந்தத் திட்டத்திற்கான அதிகபட்ச வைப்புத் தொகை வரம்பு 2 லட்சம் ரூபாயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்