மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை அமர்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப் பட்டு பத்து நாட்கள் கடந்து விட்டன, ஆனால் அதன் கூட்டத் தொடர் ஒத்தி வைப்பு (முறையான முடிவு) குறித்து இன்னும் எந்தத் தகவலும் இல்லை.
ஆகஸ்ட் 13 அன்று மக்களவையும் மாநிலங்களவையும் அதன் அமர்வுகளில் கால வரை இன்றி ஒத்தி வைக்கப்பட்டன.
மக்களவை அமர்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதற்கும் அதன் கூட்டத் தொடர் ஒத்தி வைப்புக்கும் (முறையான முடிவு) இடையிலான கால இடைவெளி பொதுவாக இரண்டு முதல் நான்கு நாட்கள் ஆகும்.
இருப்பினும், அமர்வு ஒத்தி வைப்பும் கூட்டத் தொடர் ஒத்தி வைப்பும் ஒரே நாளில் நடைபெற்ற பல நிகழ்வுகளும் உள்ளன.
2015-ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடருக்கான இடைவெளி 28 நாட்களாகவும், 2021-ஆம் ஆண்டில் அது 20 நாட்களாகவும் இருந்தது என்பது உண்மையே.
அரசியலமைப்புச் சட்டத்தின் 85(2) சரத்தின் கீழ் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவின் மூலம் சபையின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்கு வருவது கூட்டத் தொடர் ஒத்தி வைப்பு எனப்படும்.
சபையை ஒத்தி வைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே செயல்படுகிறார்.
குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், பிரதமர் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கலாம்.
சபை கூட்டத்தொடரில் இருக்கும் போது கூட, எந்த நேரத்திலும் சபையின் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படலாம்.
இருப்பினும், வழக்கமாக, சபையின் காலவரையற்ற அமர்வு ஒத்தி வைக்கப்பட்ட பின்னரே சபையின் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுகிறது.
சபையின் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதற்கும், ஒரு புதிய அமர்வில் அது மீண்டும் கூடுவதற்கும் இடைப்பட்ட காலம் 'அமர்வுகளுக்கு இடையிலான காலம்' என்று அழைக்கப் படுகிறது.
சபையின் அமர்வை ஒத்தி வைப்பதல்ல, சபையின் கூட்டத் தொடர் ஒத்தி வைப்பு தான் ஒரு அமர்வை முறையாக நிறைவு செய்து, அடுத்த அமர்வு கூட்டப் படுவதற்கு வழி வகுக்கிறது.