TNPSC Thervupettagam

மக்களவை கூட்டத் தொடர் ஒத்தி வைப்பில் தாமதம்

August 29 , 2026 15 days 91 0
  • மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை அமர்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப் பட்டு பத்து நாட்கள் கடந்து விட்டன, ஆனால் அதன் கூட்டத் தொடர் ஒத்தி வைப்பு (முறையான முடிவு) குறித்து இன்னும் எந்தத் தகவலும் இல்லை.
  • ஆகஸ்ட் 13 அன்று மக்களவையும் மாநிலங்களவையும் அதன் அமர்வுகளில் கால வரை ன்றி ஒத்தி வைக்கப்பட்டன.
  • மக்களவை அமர்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதற்கும் அதன் கூட்டத் தொடர் ஒத்தி வைப்புக்கும் (முறையான முடிவு) இடையிலான கால இடைவெளி பொதுவாக இரண்டு முதல் நான்கு நாட்கள் ஆகும்.
  • இருப்பினும், அமர்வு ஒத்தி வைப்பும் கூட்டத் தொடர் ஒத்தி வைப்பும் ஒரே நாளில் நடைபெற்ற பல நிகழ்வுகளும் உள்ளன.
  • 2015-ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடருக்கான இடைவெளி 28 நாட்களாகவும், 2021-ஆம் ஆண்டில் அது 20 நாட்களாகவும் இருந்தது என்பது உண்மையே.
  • அரசியலமைப்புச் சட்டத்தின் 85(2) சரத்தின் கீழ் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவின் மூலம் சபையின் ஒரு கூட்டத்தொடர் முடிவுக்கு வருவது கூட்டத் தொடர் ஒத்தி வைப்பு எனப்படும்.
  • சபையை ஒத்தி வைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே செயல்படுகிறார்.
  • குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், பிரதமர் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கலாம்.
  • சபை கூட்டத்தொடரில் இருக்கும் போது கூட, எந்த நேரத்திலும் சபையின் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படலாம்.
  • இருப்பினும், வழக்கமாக, சபையின் காலவரையற்ற அமர்வு ஒத்தி வைக்கப்பட்ட பின்னரே சபையின் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுகிறது.
  • சபையின் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதற்கும், ஒரு புதிய அமர்வில் அது மீண்டும் கூடுவதற்கும் இடைப்பட்ட காலம் 'அமர்வுகளுக்கு இடையிலான காலம்' என்று அழைக்கப் படுகிறது.
  • சபையின் அமர்வை ஒத்தி வைப்பதல்ல, சபையின் கூட்டத் தொடர் ஒத்தி வைப்பு தான் ஒரு அமர்வை முறையாக நிறைவு செய்து, அடுத்த அமர்வு கூட்டப் படுவதற்கு வழி வகுக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்