TNPSC Thervupettagam

மக்களவை சிறப்புரிமைகள் குழு

March 4 , 2026 11 days 113 0
  • இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் சிறப்புரிமைகள் குழு 18வது மக்களவையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அமைக்கப்படவில்லை.
  • இது அவை மற்றும் அதன் உறுப்பினர்களின் சிறப்பு உரிமைகள் மற்றும் விதி விலக்குகளைப் பாதுகாக்கும் ஒரு நிலைக்குழுவாகும் என்பதோடு இது அவர்களை வெளிப்புறத் தலையீடு எதுவும் இல்லாமல் செயல்பட அனுமதிக்கிறது.
  • இந்தக் குழு நாடாளுமன்றச் சிறப்புரிமை மீறல்களை விசாரிக்கிறது மற்றும் உறுப்பினர்களைக் கண்டித்தல், இடைநீக்கம் செய்தல் அல்லது வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க முடியும்.
  • மக்களவை சிறப்புரிமைக் குழுவில் சபாநாயகரால் பரிந்துரைக்கப்படும் 15 உறுப்பினர்களும், மாநிலங்களவை குழுவில் தலைவரால் பரிந்துரைக்கப்படும் 10 உறுப்பினர்களும் இருப்பர்.
  • அதன் அதிகாரங்கள் இந்திய அரசியலமைப்பின் 105வது சரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கும், 194வது சரத்தின் கீழ் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் வழங்கப் பட்டுள்ளன.
  • இந்தக் குழு உறுப்பினர்கள், வெளியாட்கள் மற்றும் ஆவணங்களை வரவழைத்து, பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும் அதிகாரத்தையும் பராமரிப்பதை உறுதி செய்ய முடியும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்