TNPSC Thervupettagam

மக்களவை சிறப்புரிமைகள் குழு 2026

March 8 , 2026 2 days 49 0
  • மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, 2026 ஆம் ஆண்டிற்கான சிறப்புரிமைகள் குழுவிற்கு 15 உறுப்பினர்களை பரிந்துரைத்தார்.
  • இந்தக் குழுவிற்கு ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்குவார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MPs) நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகளை சிறப்புரிமைகள் குழு ஆய்வு செய்கிறது.
  • இந்த நாடாளுமன்றக் குழுவானது அவை அல்லது அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான புகார்களை விசாரிக்கிறது.
  • மக்களவை சிறப்புரிமைகள் குழு சபாநாயகரால் பரிந்துரைக்கப்படும் 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இந்தக் குழு பகுதி-நீதித்துறை செயல்பாடுகளைச் செய்கிறது மற்றும் அதன் மீது நடவடிக்கை எடுக்க அவைக்குப் பரிந்துரைக்கிறது.
  • இந்திய அரசியலமைப்பின் சரத்துகள் 105 மற்றும் 122 இன் கீழ் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்