2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஒட்டு மொத்த நாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வாக்களிக்க உள்ள நிலையில் தெலுங்கானாவின் நிஜாமாபாத் பகுதி மக்கள் மட்டும் வாக்குப் பதிவுச்சீட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களை மட்டுமே இடம் பெறச் செய்ய முடியும். மேலும் ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக 4 இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
எனவே தேர்தல் ஆணையமானது பழைய முறையான வாக்குச் சீட்டுமுறைக்கு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.