தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹீ 2019 பொதுத் தேர்தலுக்காக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் தளத்தில் இயங்கும் நான்கு கைபேசி செயலிகளை அறிவித்தார். அவையாவன : சிவிஜில் (cVigil), வாக்காளர் உதவி மையம், கவிதா மற்றும் PwD (Persons with Disabilities).
cVIGIL (Citizen’s Vigil) என்பது குடிமக்கள் கண்காணிப்பு என்பதாகும். இது தேர்தல் நன்னடத்தை விதிமுறை / செலவு விதிமுறை மீறல் ஆகியவற்றுக்காக நேரத்தோடு முத்திரையிடப்பட்ட ஆதாரப் பூர்வமான தகவல்களை அளிப்பதோடு தானியங்கி இருப்பிட தகவலுடன் புகைப்பட/காணொளி வசதிகளையும் அது கொண்டிருக்கும்.
வாக்காளர் உதவி மையம் செயலி ஒரு நபர் வாக்காளர் பட்டியலில் தனது நிலையை அறிந்து கொள்ள உதவுகின்றது.
சுவிதா செயலி தேர்தல் பணிகளுக்கான பல்வேறு அனுமதிகளுக்காக அரசியல் கட்சியின் பிரதிநிதி, வேட்பாளர், தேர்தல் பிரதிநிதி ஆகியோருக்கு உதவிடும்.
PwD செயலி மாற்றுத் திறனாளிகள் என்று பொருள்படும். இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நேரத்தின் போது மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாளம் மற்றும் பதிவிடும் முறை ஆகியவற்றை எளிதாக்குவதற்காக தனிப் பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்கிடுவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.