TNPSC Thervupettagam

மக்களவையில் மின்னணு வழி வருகைப் பதிவு

July 31 , 2025 12 hrs 0 min 17 0
  • மக்களவை உறுப்பினர்கள் பல்லூடகச் சாதனத்தைப் பயன்படுத்தி சபையில் உள்ள தங்கள் இருக்கைகளிலிருந்து தங்கள் வருகையைக் குறிக்க வேண்டும்.
  • இது 2025 ஆம் ஆண்டு பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தொடங்கி உள்ளது.
  • இதற்கு முந்தைய அமர்வு வரையில், மக்களவை உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் முகவாயிலில் உள்ள ஒரு பதிவேட்டில் கையொப்பமிட்டனர்.
  • மின்னணு முறைமையுடன் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காலம் வழங்குவதற்காக வேண்டி இந்தப் பதிவேடு சிறிது காலம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
  • பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, உயிரியளவியல் (கட்டைவிரல் ரேகை) அல்லது PIN குறியீட்டினை உள்ளிடுவதன் மூலம், அந்தந்த பிரிவு இருக்கைகளில் சபைக்குள் தங்கள் வருகையைப் பதிவு செய்யலாம்.
  • மாநிலங்களவையானது விரைவில் இந்தப் புதிய முறையைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.
  • கடந்த ஆண்டு, சபாநாயகர் ஓம் பிர்லா, பாராளுமன்றத்தின் முகவாயிலில் உள்ள ஒரு மின்னணு வரைப்பட்டிகையில் டிஜிட்டல் பேனாவைப் பயன்படுத்தி சபையில் தங்கள் வருகையைக் குறிக்க உறுப்பினர்களுக்கு விருப்பத் தெரிவினை வழங்கியிருந்தார்.
  • நேர்த்தியான முனையங்களில் நிறுவப்பட்ட MMD அமைப்பை அறிமுகப்படுத்தியதன் மூலம் இது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • இவை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் இருக்கையிலும் பாராளுமன்ற ஆவணங்கள் மற்றும் அன்றைய நிகழ்ச்சி நிரலை அணுகப் பயன்படுத்தப் பட்டன.
  • பாராளுமன்றத்தின் முகவாயிலில் சில நேரங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அதிகரிப்பதால், இந்த நடவடிக்கை நேரத்தை மிச்சப்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
  • பாராளுமன்ற அமர்வுகளின் போது தங்கள் தினசரி படித் தொகைகளைப் பெற பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வருகையைக் குறிக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • இருப்பினும், அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் வருகைப் பதிவில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்