தமிழ்நாடு அரசானது, சமூக அடிப்படையிலான கண்காணிப்பு, அறிக்கையிடல் மற்றும் சரிபார்ப்பு (CbMRV) மூலம் மக்கள் முன்னணித்துவத்திலான பருவநிலை நுண்ணறிவு அமைப்பைத் தொடங்கியுள்ளது.
கண்காணிப்பு, அறிக்கையிடல் மற்றும் சரிபார்ப்பு (MRV) என்பது பருவநிலை மாற்றத் தாக்கங்கள், தகவமைப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளைக் கண்காணிக்கப் பயன்படுகிறது.
இந்த முன்னெடுப்பு 2023 ஆம் ஆண்டில் துரிதப்படுத்தப்பட்ட பருவநிலை மாற்றங்களுக்கான ஐக்கியப் பேரரசு கூட்டாண்மை (UK PACT) திட்டத்தின் கீழ் தொடங்கியது.
இது சமூகத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரவை மாநிலப் பருவநிலை ஆளுகையில் ஒருங்கிணைக்கிறது.
இந்த மூன்று பகுதிகளும் சோதனைப் பிரிவுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன:
நீலகிரியில் உள்ள அரக்கோடு (மலைக் காடுகள்),
ஈரோட்டில் உள்ள வெள்ளோடு (வேளாண் மற்றும் ஈரநிலங்கள்), மற்றும்
கடலூரில் உள்ள கிள்ளை (கடலோர மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள்).
மழைப்பொழிவு, வெப்பநிலை, மண், நீர், பல்லுயிர், வேளாண்மை, மீன்வளம், வாழ்வாதாரங்கள் மற்றும் கார்பன் இருப்பு பற்றியத் தரவுகளை இந்தச் சமூகங்கள் சேகரிக்கின்றன.
பாரம்பரிய சுற்றுச்சூழல் அறிவு அறிவியல் களக் கண்காணிப்பு முறைகளுடன் பயன்படுத்தப் படுகிறது.
இந்தத் தரவுகள் ஆனது உள்ளூர் திட்டமிடல், பேரிடர் தயார்நிலை மற்றும் பருவநிலை ஏற்புத் திட்டங்களை ஆதரிக்கிறது.
இந்த முன்னெடுப்பு ஆனது, தமிழ்நாட்டில் நீண்டகால சமூக அடிப்படையிலான பசுமைப் பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.