மக்களைத் தேடி மருத்துவம் (MTM) திட்டத்தின் தாக்கம்
April 30 , 2025 17 hrs 0 min 13 0
தமிழ்நாட்டின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது வயது வந்தோரிடையே ரத்த அழுத்த மேலாண்மை 17 சதவீதமும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 16.7 சதவீதமும் மேம்பட்டுள்ளதுடன், சிறப்பான சுகாதாரச் சேவைகளுக்கு வழி வகுத்துள்ளது.
2023-2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு STEPS (NCD ஆபத்துக் காரணிக் கண்காணிப்புக்கான உலக சுகாதார அமைப்பின் STEPS அணுகுமுறை) என்ற கணக்கெடுப்பிலிருந்து இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தினால் (ICMR-NIE) இது மேற்கொள்ளப்பட்டது.