மாநிலம் தழுவிய ஒரு ஆய்வானது, தமிழ்நாடு அரசின் 'மக்களைத் தேடி மருத்துவம்' (MTM) திட்டம், குறிப்பாகப் பெண்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தப் பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வு, தமிழ்நாட்டின் அனைத்து 38 மாவட்டங்களிலும் பல்வேறு நபரகளிடம் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான அளவுறுக்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒரு மாநிலம் தழுவிய ஆய்வு ஆகும்.
சுமார் 80% மக்களுக்கு, முக்கியமாக மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் களப் பணியாளர்களால் வீட்டிலேயே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.
நோயறிதல் சோதனை செய்யப்பட்ட நோயாளிகளில் 95% க்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருந்தனர், ஆனால் நோயைக் கட்டுப்படுத்தும் வீதம் குறைவாக இருந்தது.
நகர்ப்புறங்களை விட பெண்கள், கிராமப்புறவாசிகள் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரிடையே (SC/ST) இதன் பரவல் அதிகமாக இருந்தன.