2018 ஆம் ஆண்டில் மக்கள் தொகை ஈவுக் காலமான ஒரு 37 ஆண்டு காலத்திற்குள் இந்தியா நுழைந்துள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
அதிக எண்ணிக்கையிலான உழைக்கும் வயது கொண்ட மக்கள் தொகையானது 2055 ஆம் ஆண்டு வரை நீடிக்க இருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமானது (UN Population Fund - UNFPA), “மக்கள் தொகை ஈவுத் தொகையை” மக்கள் தொகையின் வயது அமைப்பில் நிகழும் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் “திறன் வளர்ச்சி” என்று வரையறுக்கின்றது.
2018 ஆம் ஆண்டு முதல், உழைக்கும் வயது கொண்ட மக்கள் தொகையானது (15 வயது முதல் 64 வயது வரை உள்ள மக்கள்) சார்ந்துள்ளோரின் மக்கள் தொகையைவிட (0 முதல் 14 வயது வரை மற்றும் 65 வயதிற்கு மேல்) அதிக அளவில் வளர்ந்துள்ளது.
ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி, அதிக அளவிலான பொருளாதாரச் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன.