பொது விழிப்புணர்வையும் பங்கேற்பையும் அதிகரிக்க இந்திய அரசு 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பிரகதி மற்றும் விகாஸ் என்ற சின்னங்களை அறிமுகப்படுத்தியது.
பிரகதி ஒரு பெண் கணக்கெடுப்பாளரையும், விகாஸ் ஒரு ஆண் கணக்கெடுப்பாளரையும் பிரதிநிதித்துவப்படுத்தும்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள் மற்றும் ஆண்களின் சமப் பங்களிப்பை இந்த உருவச்சின்னங்கள் குறிக்கின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 என்பது அலைபேசிப் பயன்பாடுகள் மற்றும் தரவு சேகரிப்புக்கான டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பானது HLO (வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பு) மற்றும் PE (மக்கள் தொகை கணக்கெடுப்பு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.