TNPSC Thervupettagam

மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான எல்லை வரையறை

July 12 , 2025 11 days 52 0
  • 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி பட்டியல் சேகரிப்பு ஆனது (HLO) 2026 ஆம் அண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று தொடங்கக் கூடும் என்று இந்தியத் தலைமைப் பதிவு அலுவலகம் (RGI) மாநில அரசுகளுக்குத் தெரிவித்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நிர்வாக எல்லைகள் இறுதி செய்யப்படும்  என்று RGI மாநில அரசுகளுக்குத் தெரிவித்துள்ளது.
  • காவல் நிலையங்கள், தாலுகாக்கள் மற்றும் மாவட்டங்களின் வரம்புகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால், அது அந்தத் தேதிக்கு முன்பே செய்யப்பட வேண்டும்.
  • 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக இறுதி செய்யப்பட்ட சுமார் 24 லட்சம் கணக்கெடுப்புத் தொகுதிகள் (EB) 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பயன்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு கணக்கெடுப்புத் தொகுதியும் பொதுவாக 150 முதல் 180 வீடுகள் அல்லது 650-800 மக்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
  • 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு என்று, வீட்டு விவரங்கள் தொடர்பான முதல் கட்டத்திற்கான 31 கேள்விகளை மத்திய அரசு அறிவித்தது.
  • 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்று, அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக சாதி வாரியான கணக்கெடுப்பைச் சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆனது, முதல் முறையாக, சாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும்.
  • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்குவதாகவும், மேலும் இது 2027 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதியன்று நள்ளிரவு நேரமானது அதற்கான குறிப்பு தேதியாக இருக்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு ஜூன் 04 ஆம் தேதியன்று உள்துறை அமைச்சகமானது அறிவித்தது.
  • 2025 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதியன்று, அமைச்சகத்தின் கீழ் செயல்படும் RGI மற்றும் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் ஆகியவை இந்திய அரசு இதழில் இந்தச் செயல்முறையை அறிவித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்