TNPSC Thervupettagam

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2021

March 29 , 2020 1948 days 1230 0
  • கோவிட் பிரச்சினை காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பித்தல் ஆகிய இரண்டு பணிகளும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2021ஐ  இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டிருந்தது.
  • முதல் கட்டமானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தத் திட்டமிடப் பட்டிருந்தது. இரண்டாம் கட்டமானது 2021 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதத்தில் நடத்தத் திட்டமிடப் பட்டிருந்தது.
  • தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணியானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2021 உடன்  நடத்த திட்டமிடப் பட்டிருந்தது.
  • இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியத் தலைமைப் பதிவாளர்  அலுவலகத்தால் நடத்தப்பட உள்ளது.
  • தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் செயல்முறையிலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டுள்ள ஒரே மாநிலம் அசாம் ஆகும்.
  • அசாம் மாநிலத்திற்கான பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணியானது தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் கீழ் செய்யப் பட்டது.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு

  • 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகைப்  பதிவேட்டிற்கான தரவுகள் முதன்முதலில் 2010 ஆண்டில் சேகரிக்கப்பட்டது.
  • தேசிய மக்கள் தொகைப் பதிவேடானது உயிர்த்தரவுகள் மற்றும் மக்கள் தொகைத் தரவுகளை சேகரிக்கிறது.
  • உயிர்த்தரவுகள் ஆதார் விவரங்கள் மூலம் புதுப்பிக்கப்பட உள்ளது.
  • தேசிய மக்கள் தொகைப் பதிவேடானது உயிர்த்தரவுகளைச் சேகரிப்பது இதுவே முதல் முறையாகும்.
  • முன்னதாக 2010 ஆம் ஆண்டில், மக்கள் தொகை விவரங்கள் மட்டுமே சேகரிக்கப் பட்டன.
  • பின்னர் 2015 ஆம் ஆண்டில், ஆதார், ரேஷன் அட்டை எண்கள் மற்றும் அலைபேசி எண்களுடன்  இத்தரவானது புதுப்பிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்