TNPSC Thervupettagam

மக்காச்சோளம் சாகுபடி பரப்பளவு

August 19 , 2025 2 days 53 0
  • இந்தியாவில் மக்காச் சோளம் சாகுபடி 2025–26 ஆம் ஆண்டின் காரீஃப் பயிர்ப் பருவத்தில் 91.89 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது என்பதோடு இது கடந்த ஆண்டு 83.15 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
  • இந்த 10.5 சதவீத உயர்வு ஆனது E20 எத்தனால்-கலப்புத் திட்டத்தால் உந்தப்பட்டு, மக்காச்சோளத்தின் தேவை மற்றும் விலைகளை அதிகரித்தது.
  • மொத்த எத்தனால் உற்பத்தியில் 42.74 சதவீத பங்களிப்பை வழங்குவதுடன், 2023–24 ஆம் ஆண்டில் மக்காச்சோளம் முதன்மையான எத்தனால் மூலப் பொருளாக மாறியது.
  • இந்த மாற்றம் எண்ணெய் வித்துகளின் சாகுபடிகளுக்கான நிலத்தை சுமார் 7 லட்சம் ஹெக்டேர்களாகவும், துவரை சாகுபடிக்கு 2 லட்சம் ஹெக்டேர்களாகவும் குறைத்துள்ளதால் உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த அச்சுறுத்தல்களை எழுப்பியுள்ளது.
  • கோழி மற்றும் கால்நடை தீவனத் துறைகளில் இந்தியாவின் மக்காச் சோளத்தில் 60 முதல் 70 சதவீதம் வரை பயன்படுத்துவதால், தற்போது அவை நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
  • எத்தனால் தொடர்பான ஊக்கத்தொகைகள் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பும் 1.64 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சோயா அவரை சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்