September 3 , 2025
19 days
75
- இந்தியப் பிரதமருக்கு அவரது ஜப்பான் பயணத்தின் போது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஒரு பாரம்பரிய தருமப் பொம்மை பரிசாக வழங்கப் பட்டது.
- ஜப்பானியக் கலாச்சாரத்தில் தருமப் பொம்மை மங்களகரமானதாகவும், அதிர்ஷ்ட கூறுகள் கொண்டதாகவும் கருதப்படுகிறது.
- குன்மாவில் உள்ள தகாசாகி நகரம் பிரபலமான தருமப் பொம்மைகளின் பிறப்பிடம் ஆகும்.
- ஜப்பானில் தருமப் பாரம்பரியம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இந்தியத் துறவி போதிதர்மரின் மரபை அடிப்படையாகக் கொண்டது.
- அவர் ஜப்பானில் தரும டைஷி என்று அழைக்கப்பட்ட அவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
Post Views:
75