தேசியத் தலைநகரப் பிராந்தியத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள மங்கார் பானி என்ற வனப் பகுதியில் மிகச் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.
இது பழைய கற்காலத்தில் வாழ்ந்த முற்கால மனிதரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தினை வழங்குகிறது.
இந்த முக்கிய அகழ்வாராய்ச்சியில் இறைச்சி வெட்டுதல், உரித்தல் மற்றும் கூர்மைப் படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை ஆரம்பகாலக் கற்காலச் சமூகங்களின் புதுப் புனைவுத் திறனை மிகவும் நன்கு வெளிப்படுத்துகின்றன.
இந்தக் கருவிகளின் காலம் சுமார் 500,000 முதல் 200,000 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
இந்த மங்கர் பானிப் பகுதியானது தேசியத் தலைநகரப் பிராந்தியத்தில் உள்ள மிகவும் புனிதமான தோப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.