TNPSC Thervupettagam
September 13 , 2025 10 days 61 0
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாடு இல்லாத வளாகங்களை உருவாக்குதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று அமைப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மஞ்சப்பை விருதுகள் 2025 வழங்கப் பட்டன.
  • தர்மபுரி மாவட்டம், பேலாரஹள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, பள்ளிப் பிரிவில் முதல் பரிசாக 10 லட்சம் ரூபாய் வென்றது.
  • அரியலூர் மாவட்டம், சிறுவளூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, பள்ளிப் பிரிவில் இரண்டாவது பரிசாக 5 லட்சம் ரூபாய் வென்றது.
  • ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு ஆடவர் மேல்நிலைப் பள்ளி, பள்ளிப் பிரிவில் மூன்றாவது பரிசாக 3 லட்சம் ரூபாய் வென்றது.
  • திருச்சி ஜமால் முகமது கல்லூரி, கல்லூரிப் பிரிவில் முதல் பரிசாக 10 லட்சம் ரூபாய் வென்றது.
  • ஈரோடு மாவட்டத்தின் T.N. பாளையம், JKK முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி, கல்லூரிப் பிரிவில் இரண்டாவது பரிசாக 5 லட்சம் ரூபாய் வென்றது.
  • கல்லூரிப் பிரிவில் திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி 3 லட்சம் ரூபாய்க்கான மூன்றாவது பரிசை வென்றது.
  • இது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (TNPCB) மூலமான தமிழ்நாடு அரசின் முன் முயற்சி ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்