TNPSC Thervupettagam

மஞ்சள்நிற பஃப்பால் காளான்

June 12 , 2026 4 days 77 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ள செதுவா கிராமத்தில் அரிய வகை மஞ்சள்நிற பஃப்பால் காளான் பதிவு செய்யப்பட்டது.
  • போவிஸ்டா கொலராட்டா என்பது பஃப்பால் வகையைச் சேர்ந்த ஒரு பூஞ்சையாகும்; இது அதன் பிரகாசமான மஞ்சள் நிறம் மற்றும் வட்டமான கனி உறுப்புக்கு பெயர் பெற்றது.
  • பஃப்பால் காளான்கள் மூடிய அமைப்பிற்குள் வித்துகளை உருவாக்குகின்றன. மேலும், அவற்றின் வெளிப்புறச் சுவர் வெடிக்கும் போது வித்துகளை வெளியிடுகின்றன.
  • அகாரிகேசி குடும்பத்தைச் சேர்ந்த போவிஸ்டா, சிதைவு மற்றும் ஊட்டச்சத்து மறு சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்