மட்லா அபியான் பயிற்சி என்பது மட்லா நதியில் இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்ட 5 நாட்கள் கால அளவுள்ள ஒரு கடலோரக் காவல் படைப் பயிற்சி ஆகும்.
இந்தப் பயிற்சியின் போது சுந்தரவனக் கழிமுகப் பகுதியில் இரண்டு இந்தியக் கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டன.
அதிலிருந்த மாலுமிகள் கடலோரப் பாதுகாப்பு, கடலோரக் காவல் நிலையங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி உள்ளூர் மீனவர்களுடன் கலந்துரையாடினர்.
அந்த நதி சுந்தரவனம் மற்றும் அதனைச் சுற்றிலும் ஒரு அகலமான நதி முகத்துவாரத்தை உருவாக்குகின்றது.