மண உறவு உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
January 19 , 2025 236 days 209 0
மண உறவு உரிமைகள் மீட்பு மற்றும் பராமரிப்பு உரிமை தொடர்பான வழக்குகள் "முற்றிலும் சுயாதீனமானவை" மற்றும் "நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பற்றவை" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், மண உறவு உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு ஆணையை எந்த ஒருவர் பின்பற்ற மறுத்தாலும், கணவர் தனது மனைவிக்கு தொடர்ந்து அவரின் பராமரிப்புத் தொகையை வழங்க வேண்டும்.
1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் (HMA) 9வது பிரிவானது, மண உறவு உரிமைகளை மீட்டெடுப்பது பற்றிக் கூறுகிறது.