இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு அருகில் சுமார் 6,000 அடி உயரத்தில் ஒரு இணை மயில்கள் காணப்பட்டன என்ற நிலையில்இது வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வாகும்.
மயில்கள் ஃபேசியானிடே (Phasianidae) என்ற பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
இந்திய அல்லது நீல மயில் (Pavo cristatus) இந்தியாவின் தேசியப் பறவையாகும்.
மயில்கள் பொதுவாக சமவெளிகள் மற்றும் தாழ்வான மலைப்பகுதிகளில், சுமார் 1,000–1,500 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் உள்ள வெப்பமான காடுகள், புல்வெளிகள் மற்றும் விவசாயப் பகுதிகளில் வாழ்கின்றன.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN)படி இது குறைந்த தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.