மணிப்பூரின் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தவர்களுக்கான திட்டம்
March 15 , 2024 617 days 419 0
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது மணிப்பூரின் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்தவர்களுக்கான நிவாரண முகாம்களிலேயே அவர்கள் வாக்களிப்பதற்கான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு, நிவாரண முகாம்களில் அமைக்கப் படும் "சிறப்பு வாக்குச் சாவடிகளில்" வாக்களிக்கும் வசதி வழங்கப்படும் என்று ECI கூறியுள்ளது.
2023 ஆம் ஆண்டு மே 03 ஆம் தேதியன்று வெடித்த இன வன்முறையின் காரணமாக சில வாரங்களுக்குள் 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
மேலும் 9,000 பேர் மிசோரமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.