மணிப்பூரின் புதிய முதலமைச்சர் - யும்னம் கேம்சாந்த் சிங்
February 7 , 2026 41 days 113 0
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை (சரத்து 356) ரத்து செய்தார்.
முதலமைச்சர் நோங்தோம்பம் பிரேன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டிருந்தது.
யும்னம் கெம்சாந்த் சிங் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி மணிப்பூரின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
நெம்சா கிப்கென் மற்றும் லோசி திக்கோ ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றனர்.