மண்ணின் ஈரப்பதம் - இடியுடன் கூடிய பெருமழை முன்னறிவிப்புக்கான குறி காட்டி
May 3 , 2025 18 days 43 0
பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தச் செய்யும் கடுமையான இடியுடன் கூடிய பெருமழைக்கான ஒரு முன் எச்சரிக்கை சமிக்ஞையாக மண்ணின் ஈரப்பதம் இருக்கக்கூடும்.
பெரிய அளவிலான வெப்பச்சலன மழை குவிய அமைப்பு (MCS) என்பது இங்கிலாந்தை விட பெரிய பகுதிகளில் பரவக் கூடிய, நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் வரையில் பயணிக்கக் கூடிய இடியுடன் கூடிய பெருமழைத் தொகுதிகள் ஆகும்.
இந்த அமைப்புகளானது அடிக்கடி கடுமையான மழைப்பொழிவை ஏற்படுத்துவதால், உயிர்கள், கால்நடைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்குப் பரவலானச் சேதத்தினை ஏற்படுத்துகின்றன.
வெப்பமண்டலப் பகுதிகளில் பதிவான மொத்த மழைப்பொழிவில் சுமார் 50 முதல் 90 சதவீதம் ஆனது MCS அமைப்புகளால் ஏற்படுகின்றன.
இந்தியா, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா மற்றும் சீனாவின் சில பகுதிகள் MCS அமைப்புகளுக்கான முதன்மை மையங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளாக உள்ளன.
இதில் புயல் உருவாவதற்கு இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு முன்னதாக மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியலாம்.
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு மேலான பரப்பில் காணப்படும் மண்ணில் உள்ள ஈரப்பதத்தின் அளவு என்பது மாறுபடுவதால் ஏற்படும் வளிமண்டல மாற்றங்கள் புயலின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை மழைப்பொழிவின் பரப்பளவையும் அளவையும் அதிகரிக்கின்றன.