TNPSC Thervupettagam

மண்ணின் ஈரப்பதம் - இடியுடன் கூடிய பெருமழை முன்னறிவிப்புக்கான குறி காட்டி

May 3 , 2025 18 days 44 0
  • பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தச் செய்யும் கடுமையான இடியுடன் கூடிய பெருமழைக்கான ஒரு முன் எச்சரிக்கை சமிக்ஞையாக மண்ணின் ஈரப்பதம் இருக்கக்கூடும்.
  • பெரிய அளவிலான வெப்பச்சலன மழை குவிய அமைப்பு (MCS) என்பது இங்கிலாந்தை விட பெரிய பகுதிகளில் பரவக் கூடிய, நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் வரையில் பயணிக்கக் கூடிய இடியுடன் கூடிய பெருமழைத் தொகுதிகள் ஆகும்.
  • இந்த அமைப்புகளானது அடிக்கடி கடுமையான மழைப்பொழிவை ஏற்படுத்துவதால், உயிர்கள், கால்நடைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்குப் பரவலானச் சேதத்தினை ஏற்படுத்துகின்றன.
  • வெப்பமண்டலப் பகுதிகளில் பதிவான மொத்த மழைப்பொழிவில் சுமார் 50 முதல் 90 சதவீதம் ஆனது MCS அமைப்புகளால் ஏற்படுகின்றன.
  • இந்தியா, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா மற்றும் சீனாவின் சில பகுதிகள் MCS அமைப்புகளுக்கான முதன்மை மையங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளாக உள்ளன.
  • இதில் புயல் உருவாவதற்கு இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு முன்னதாக மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியலாம்.
  • நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு மேலான பரப்பில் காணப்படும் மண்ணில் உள்ள ஈரப்பதத்தின் அளவு என்பது மாறுபடுவதால் ஏற்படும் வளிமண்டல மாற்றங்கள் புயலின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து சுமார் 10 முதல் 30 சதவீதம் வரை மழைப்பொழிவின் பரப்பளவையும் அளவையும் அதிகரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்