துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் (MoPSW) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் 5வது மண்ணின் மைந்தர்கள் விருதுகள் அசாம் 2025 ஆம் ஆண்டிற்கான விழாவில் மண்ணின் மைந்தர்கள் - வளர்ந்து வரும் சாதனையாளர் விருதை வழங்கினார்.
ஐந்து இளம் சாதனையாளர்கள் வளர்ந்து வரும் சாதனையாளர் விருதைப் பெற்றனர்:
சுக்ரிதா பருவா (ஊடகம் மற்றும் தொடர்பு)
சங்கமித்ரா கலிதா (தொழில்முனைவு)
இஷாராணி பருவா (விளையாட்டு)
ஹிம்ஜோதி தாலுக்தார் (கலை மற்றும் கலாச்சாரம்) மற்றும்
டாக்டர் தேப்ஜானி போரா (பாதுகாப்பு).
ஐந்து பிரபல நபர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றனர்:
அருண் நாத் (கலை மற்றும் கலாச்சாரம்)
ரவி சங்கர் ரவி (செய்தி மற்றும் ஊடகம்)
மைனுதீன் அகமது (விளையாட்டு)
லக்கிமி பருவா (தொழில்முனைவு) மற்றும்
சிமந்த தாஸ் (பொது சேவை).
சமூகத் துறை மேம்பாட்டு விருது ஆனது டாக்டர் அலகா சர்மா மற்றும் அக்சர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மண்ணின் மைந்தர்கள் விருதுகள் ஆனது கேர் லூயிட் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.