கோவா மற்றும் கார்வார் ஆகிய இடங்களின் கடல் பகுதியில் மிகப்பெரிய அளவில் முப்படை ஒத்திகையான மதத் 2018 என்ற பயிற்சி நடத்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பயிற்சியானது ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர் தலைமையகத்தின் (Headquarters Integrated Defence Staff-HQIDS) ஆலோசனையுடன் இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை ஆணையரகத்தினால் (Western Naval Command) ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த பயிற்சியானது கூட்டாக போரிடும் திறன்களை வலிமைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டு ஒத்திசைவை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான முயற்சியாகும்.