மதம் அல்லது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 22
August 23 , 2019 2211 days 638 0
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று “மதம் அல்லது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை” உலக நாடுகள் முதன் முறையாக அனுசரிக்கின்றன.
பெரும்பாலும் மறந்து போன கொடூரமான செயல்களில் பாதிக்கப்பட்டவர்களையும், அவற்றிலிருந்து மீண்டு வாழ்பவர்களையும் கௌரவிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு மே 28 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஆகஸ்ட் 22 ஆம் தேதியை இதற்கான சர்வதேச தினமாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.